கமல் – 237 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் மெட்ராஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள்.

பின்னர் லோகேஷ் கனகராஜ் படங்களான மாநகரம், கைதி. மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றுள்ளார்கள். தற்போது, அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்திப்  படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.

கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்றதுடன் கேஜிஎஃப் – 2 படத்திற்கும் தேசிய விருதை நேற்று (அக். 8) பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *