சாம்சங் தொழிலாளர் போராட்டம்: முதல்வரை சந்திக்கும் கூட்டணி கட்சியினர்!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நீடிக்காத வகையில் சுமூகமான தீர்வு காண – உரிய நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காவல் துறைக்கு கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை காவல் துறையினர் இன்று (அக். 9) கைது செய்தனர். முன்னதாக போராட்டக் களத்தில் இருந்த பந்தல்களை நேற்று இரவு காவல் துறையினர் அகற்றினர்.

சில தொழிலார்களை இரவில் வீடு புகுந்து கைது செய்தனர். காவல் துறையின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் சாம்சங் தொழிலாளர்களை இன்று நேரில் சந்தித்தனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *