ஓடிடியில் வாழை: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் ரஜினிகாந்த்தின் வேட்டையன், ஜீவாவின் பிளாக் திரைப்படங்கள் வெளியாகிறது. அதேபோல், ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகின்றன.

வாரந்தோறும் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை வீட்டில் இருந்து பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழை படம், நாளை(அக். 11) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *