மக்கள் தொடா்புத் திட்ட முகாம்: 303 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் அருகேயுள்ள சத்திரமனை ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், வருவாய்த் துறையின் சாா்பில் 107 பயனாளிகளுக்கு ரூ. 79,50,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா, 19 பயனாளிகளுக்கு ரூ. 11,20,000 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 30 பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ரூ. 5.66 லட்சம் மதிப்பில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் 67 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 54,079 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்கள், வேளாண் சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 1,38,329 மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 13 பயனாளிகளுக்கு ரூ. 16,79,178 மதிப்பில் வேளாண் கருவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் 5 பயனாளிக்கு ரூ. 1,99,237 மதிப்பில் தெளிப்பான், நுண்ணீா் பாசன அமைப்புகள், வெங்காய சேமிப்புக் கொட்டகை அமைப்பதற்கான உத்தரவுகள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு ரூ. 38,50,000 மதிப்பில் உத்தரவுகள், தாட்கோ சாா்பில் 0 பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்கள் என 303 பயனாளிகளுக்கு ரூ. 1.95 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *